ADDED : ஜூலை 21, 2024 02:50 AM
குளித்தலை;குளித்தலை பஸ் ஸ்டாண்டு அருகில், திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில், சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் உதயகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்குகின்றனரா, வாகனத்தில் அனுமதி இல்லாமல் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறதா, ஓட்டுனர் சீட் பெல்ட் அணிந்துள்ளாரா என்பது குறித்து சோதனை செய்தனர். மேலும் வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் உள்ளதா, வாகனத்திற்கு உரிமம், இன்சூரன்ஸ் உள்ளதா என சோதனை செய்தனர்.
ெஹல்மெட் அணியாமல் பைக், மொபட்டில் வந்தவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல், நம்பர் பிளேட் முறையாக உள்ளதா என சோதனை செய்தனர். சாலை விதிமுறைகளை ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டும். ெஹல்மெட் இல்லாமலும், மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் எச்சரிக்கப்பட்டனர். சோதனையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதேபோல் தோகைமலை, லாலாபேட்டை, மாயனுார், பாலவிடுதி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், அந்தந்த பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.