/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடி வெள்ளி, பவுர்ணமியொட்டி வாழைத்தார்கள் விலை உயர்ந்தது
/
ஆடி வெள்ளி, பவுர்ணமியொட்டி வாழைத்தார்கள் விலை உயர்ந்தது
ஆடி வெள்ளி, பவுர்ணமியொட்டி வாழைத்தார்கள் விலை உயர்ந்தது
ஆடி வெள்ளி, பவுர்ணமியொட்டி வாழைத்தார்கள் விலை உயர்ந்தது
ADDED : ஜூலை 21, 2024 02:56 AM
கரூர்;ஆடி வெள்ளி மற்றும் பவுர்ணமியையொட்டி, வாழைத்தார்கள் விலை உயர்ந்துள்ளது.
கடந்த, 17ல் ஆடி மாதம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம், ஆடி வெள்ளி கிழமையையொட்டி, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்றும் கோவில்களில் ஆடி பவுர்ணமியை யொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது. இதனால், நேற்று கரூர் மாவட்டத்தில் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட் மற்றும் பல்வேறு பகுதிகளில் வாழைத்தார்களின் விலை உயர்ந்தது.
கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார் நேற்று, 450 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 370 ரூபாய், கற்பூரவள்ளி, 350 ரூபாயில் இருந்து, 450 ரூபாய், பச்சைநாடான் வாழைத்தார், 250 ரூபாயில் இருந்து, 370 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்ற மொந்தன் வாழைத்தார், 420 ரூபாய்க்கு விற்றது.