/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் வெளியேற்றத்தால் குண்டும், குழியுமாக மாறிய சாலை
/
கழிவுநீர் வெளியேற்றத்தால் குண்டும், குழியுமாக மாறிய சாலை
கழிவுநீர் வெளியேற்றத்தால் குண்டும், குழியுமாக மாறிய சாலை
கழிவுநீர் வெளியேற்றத்தால் குண்டும், குழியுமாக மாறிய சாலை
ADDED : ஆக 15, 2024 01:40 AM
கரூர் சாலையில் நேரடியாக கழிவுநீர் விடப்படுபவதால், குண்டும் குழியுமாக சாலை மாறி விட்டது.
கரூர் தெற்கு காந்திகிராமத்தில், சக்தி நகர், கே.கே.நகர், இந்திராநகர் பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், சாலை, மழைநீர் வடிகால் வசதி இல்லை. பல தெருக்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. சாக்கடை வசதி இல்லாததால், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
சாக்கடை கால்வாய் வசதியில்லாததால், பலர் வீடுகளின் வெளியே தொட்டி கட்டி, அதில் கழிவுநீர் விடுகின்றனர். ஆனால், சக்தி நகர் சாலையில் வீட்டில் இருந்து நேரடியாக சாலையில் கழிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சாலை குண்டும், குழியுமாக மாறி விட்டது. அதில், தண்ணீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தியும் அதிகரித்-துள்ளதால், இரவு நேரத்தில் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
அந்த சாலை வழியாக பள்ளி வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் செல்கின்றன. மேடு பள்ளமான சாலையில் இரவு நேரத்தில், டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். உடனடியாக வீடுகளில் இருந்து, சாலையில் கழிவுநீர் விடுவதை தடுக்க வேண்டும். அவர்களுக்கு கழிவுநீர் வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்த தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.