ADDED : ஜூன் 06, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர்-திருச்சி சாலையில், உழவர் சந்தை உள்ளது.
அந்த பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள், வியாபார நிறுவனங்கள் உள்ளது. உழவர் சந்தைக்கு வரும் வியாபாரிகள், கழிவு பொருட்களை சாக்கடை கால்வாயில் வீசுகின்றனர். மேலும் சாக்கடையில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதை தடுக்க, சாக்கடை கால்வாய் மேல் பகுதியில், சிலாப் கற்கள் போடப்பட்டது. தற்போது, பல இடங்களில் அவை உடைந்த நிலையில் உள்ளது. கழிவு பொருட்கள், சாக்கடையில் விழுவதை தடுக்க சிலாப் கற்களை மாற்ற வேண்டும்.