/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் படுகாயம்
/
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் படுகாயம்
ADDED : செப் 03, 2024 03:42 AM
அரவக்குறிச்சி,: ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சிவசக்தி நகர் அருகே செந்தில்-நாதன் கேம்பஸ் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் மகன் கவுதம் ராஜ், 28. இவர், சின்னதாராபுரத்திலிருந்து தென்னிலை செல்லும் சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
சி.கூடலுார் அருகே சென்றபோது, எதிர் திசையில் மற்றொரு டூவீ-லரில் வந்த நபர், கவுதம்ராஜ் ஓட்டி வந்த டூவீலர் மீது வேகமாக மோதி நிற்காமல் விட்டு சென்றுள்ளார். இந்த விபத்தில் படு-காயம் அடைந்த கவுதம்ராஜை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக கௌதம்ராஜின் தந்தை கவுந்தர்ராஜன் அளித்த புகார்படி, சின்ன-தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்-திய டூவீலர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.