/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீரன் சின்னமலை நினைவு நாள் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மரியாதை
/
தீரன் சின்னமலை நினைவு நாள் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மரியாதை
தீரன் சின்னமலை நினைவு நாள் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மரியாதை
தீரன் சின்னமலை நினைவு நாள் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மரியாதை
ADDED : ஆக 04, 2024 01:39 AM
கரூர், கரூர் மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள், நேற்று அனுசரிக்கப்பட்டது. அதில், தீரன் சின்னமலை உருவ படத்துக்கு, மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் பாபு, மாநகர செயலாளர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், மன்னர் வல்வில் ஓரி உருவப்படத்துக்கும், மாலை அணிவிக்கப் பட்டது. நிகழ்ச்சியில், மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, ஜெயலலிதா பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்ட, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், செயலாளர் மூர்த்தி தலைமையில், பஸ் ஸ்டாண்ட் அருகே தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, மாநில துணை செயலாளர் நடராஜன், வணிகர் பிரிவு தலைவர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், நாம் தமிழர் கட்சி, தீரன் சின்ன மலை கவுண்டர் பேரவை, கொங்கு இளைஞர் பேரவை சார்பிலும் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.