/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தலை காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை திருச்சிக்கு நோயாளிகளை அனுப்பும் அவலம்
/
தலை காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை திருச்சிக்கு நோயாளிகளை அனுப்பும் அவலம்
தலை காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை திருச்சிக்கு நோயாளிகளை அனுப்பும் அவலம்
தலை காயம் சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை திருச்சிக்கு நோயாளிகளை அனுப்பும் அவலம்
ADDED : மே 30, 2024 01:49 AM
கரூர்:கரூர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, தோல், இருதயம் உட்பட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.
தினமும், 1,000த்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் இங்கு தலை காயத்துக்கு, சிகிச்சையளிக்க டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவ பணியாளர்கள் கூறியதாவது:
சாலை விபத்து, அடிதடிகளில் காயம் அடைவோர் விபத்து சிகிச்சை பிரிவு, அவசரசிகிச்சைக்காக வருகின்றனர்.
தினமும் சராசரியாக, 20 - 30 பேர் வரை விபத்து சிகிச்சைக்கு வருகின்றனர். பெரும்பாலானோர் உயிருக்கு போராடும் நிலையிலேயே வருகின்றனர்.
இங்கு, தலை காயத்துக்கு சிகிச்சையளிக்க டாக்டர் நியமனம் செய்யப்படவில்லை.
தலையில் அடிபடுவோருக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே இங்கு அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கரூரில் இருந்து திருச்சிக்கு ஆம்புலன்ஸ் செல்ல, 2 மணி நேரமாகும். உடனடியாக சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், உரிய நேரத்தில் திருச்சி செல்ல முடியாமல் வழியிலேயே பெரும்பாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே, இங்கு தலை காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
இது குறித்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பொறுப்பு டீன் ராஜா கூறுகையில், ''தலை காயத்துக்கு சிகிச்சையளிக்கும் நரம்பியல் டாக்டர்,- நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகிய பணியிடங்கள் இங்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை,'' என்றார்.