/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் தொகுதியில் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்
/
கரூர் தொகுதியில் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்
கரூர் தொகுதியில் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்
கரூர் தொகுதியில் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்
ADDED : ஏப் 10, 2024 02:12 AM
கரூர்;கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலை விருந்தினர் மாளிகையில், கரூர் லோக்சபா தொகுதி பொது மேற்பார்வையாளர் ராகுல் அசோக்கை சந்தித்து, நேற்று மாலை புகார் மனு அளித்த மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறியதாவது:கரூர் பஞ்., யூனியன் பகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலு, நானும் பிரசாரம் செய்யும் போது, மணல் கடத்தல் கும்பல் டூவீலரில் வந்து பிரச்னை செய்தனர். அப்போது, அ.தி.மு.க.,வினரை சமாதானம் பேசி, அழைத்து சென்று விட்டேன். போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நெரூர், மல்லம்பாளையம், வாங்கல் உள்ளிட்ட ஐந்து இடங்களில் சட்ட விரோதமாக லாரிகளில் மணல் அள்ளுகின்றனர். அதன் மூலம் வரும் பணத்தை வைத்து கொண்டு, செலவு செய்து கரூர் பஞ்., யூனியனில் அதிக ஓட்டுகள் வாங்க தி.மு.க., முயற்சி செய்கிறது. அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்கின்றனர். ஆனால், காங்., வேட்பாளர் உள்ளிட்ட, தி.மு.க.,வினர் மீது வழக்கு போடுவதில்லை.
கரூர் லோக்சபா தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. போலீஸ் அதிகாரிகள், அரசு துறை அதிகாரிகளை இட மாற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து, தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வோம். உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம்.
கரூர் தொகுதியில், காங்., வேட்பாளர் ஜோதிமணிக்கு தோல்வி உறுதி என்பதால், தி.மு.க.,வினருடன் சேர்ந்து கொண்டு, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் செயல்படுகின்றனர். கரூர் லோக்சபா தொகுதியில், மக்களை அடைத்து வைக்க பட்டிகளை, தி.மு.க.,வினர் தயார் செய்துள்ளனர். இதுகுறித்து காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. அதை கூட, போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அதையெல்லாம் முறியடித்து, கரூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி பெறும்.
இவ்வாறு கூறினார்.

