/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் முட்செடிகள்: அகற்ற மக்கள் கோரிக்கை
/
சாலையில் முட்செடிகள்: அகற்ற மக்கள் கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2024 03:32 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி - பரளி வழியாக கருங்களாப்பள்ளி, சிவாயம், அய்யர்மலை மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கியமான நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. தண்ணீர்பள்ளி புற்றுக்கோவில் முதல் பரளி கொடிங்கால் வடிகால் வாய்க்கால் வரை சாலையின் இருபுறமும் முற்செடிகள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. இந்த சாலையில் கனரக வாகனங்ள், கார், பைக் உள்ளிட்டவை சென்று வருகின்றன.
தற்போது, மருதுார் ரயில் பாதையில் குகை வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால், மருதுார் - மேட்டுமருதுார் நெடுஞ்சாலையில், பொது மக்கள் பரளி நெடுஞ்சாலையில் பயணம் செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அதிகளவு மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பரளி - தண்ணீர்பள்ளி நெடுஞ்சாலையில் வளர்ந்துள்ள முற்செடிகள், கொடிகளை அகற்ற, யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.