/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அருகே தோகைமலை காவல் நிலையத்தில் திருச்சி டிஐஜி ஆய்வு
/
குளித்தலை அருகே தோகைமலை காவல் நிலையத்தில் திருச்சி டிஐஜி ஆய்வு
குளித்தலை அருகே தோகைமலை காவல் நிலையத்தில் திருச்சி டிஐஜி ஆய்வு
குளித்தலை அருகே தோகைமலை காவல் நிலையத்தில் திருச்சி டிஐஜி ஆய்வு
ADDED : ஜூலை 01, 2024 08:39 PM

கரூர் மாவட்டம் குளித்தலை துணைக் காவல் கண்காணிப்பாளர் சரக்கத் உட்பட்ட தோகைமலை காவல் நிலையத்தில் இன்று மாலை திருச்சி டிஐஜி மனோகர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் கொலை குற்றம், வழிப்பறி வழக்கு ,திருட்டு வழக்கு, வெடி மருந்து இருப்பு பதிவேடு, உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து ஆய்வாளர் அலுவலகத்தில் உள்ள கழிவறை, கணிணியறை, ஆயுத கிடங்கு, கைதியறை உள்ளிட்ட அறைகள் மற்றும் கட்டிடங்களையும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் டி.ஐ.ஜி மனோகர் மரக்கன்று நட்டார்.
இந்த ஆவின் போது கரூர் எஸ் பி முனைவர் பிரபாகர், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், தோகைமலை காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணி, லட்சுமி, ரெத்தினகிரி, கண்ணதாசன் உள்ளிட்ட காவலர்கள் உடன் இருந்தனர்.