/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எல். பள்ளியில் இலவச சிகிச்சை முகாம்
/
டி.என்.பி.எல். பள்ளியில் இலவச சிகிச்சை முகாம்
ADDED : ஆக 30, 2024 01:17 AM
கரூர் ஆக. 30--
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:
புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன், செப்.,1 காலை 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. கண் விழித்திரையில் பார்வையிழப்பு (சர்க்கரை நோய் காரணமாக), பிறவி கண்புரை, கண்நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து, கண் எரிச்சல், கண் வலி, கண்ணின் கருவிழியில் புண், கண் பார்வை குறைபாடு.
இதர கண் சம்பந்தமான நோய் உள்ள பொதுமக்கள் முகாமில் பங்கேற்று, இலவசமாக கண் பரிசோதனை செய்து கொள்ளலாம். கண் டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படும் கிட்டப்பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ள ஏழை எளிய மக்களுக்கு கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்படும். கண்புரை உள்ள நோயாளிகள் அனைவருக்கும், உள்விழி லென்ஸ் அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தும் இலவசம். முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தேநீர், மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமிற்கு கிராம பகுதிகளிலிருந்து, கண் குறைபாடு உள்ளவர்களை அழைத்து வர ஆலை நிர்வாகம் புன்னம்சத்திரம், தளவாபாளையம், நொய்யல் குறுக்குசாலை, வேலாயுதம்பாளையம் மற்றும் ஓனவாக்கல்மேடு ஆகிய ஐந்து வழித்தடங்களில் பஸ் வசதி ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.