/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
/
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
ADDED : மார் 03, 2025 07:29 AM
கரூர்: விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கரூர் மார்க்கெட்டுக்கு தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. இதனால், விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்தாண்டு, டிசம்பர் மாதம், மழை பெய்தது. இதனால், குறுகிய கால பயிரான தக்காளியை விவசாயிகள், அதிகளவில் சாகுபடி செய்தனர். இதனால், மாநிலம் முழுவதும் தக்காளி நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டத்துக்கு, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலுார் மற்றும் மதுரை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால், தக்காளி விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
கடந்த ஜனவரி மாதம், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய் வரை விற்றது. வரத்து அதிகரித்துள்ளதால், கரூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 12 ரூபாய் முதல், 14 ரூபாய் வரை விற்றது. தக்காளி விலை குறைவால், இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியும், விவசாயிகளுக்கு கவலையும் ஏற்பட்டுள்ளது.