/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்; கரூர் மலர் மெட்ரிக் பள்ளி மாணவருக்கு பாராட்டு

ADDED : மே 17, 2024 01:49 AM
கரூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த, கரூர் மலர் மெட்ரிக் பள்ளி மாணவருக்கு பள்ளி தாளாளர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
கரூர், தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாணவன் ஹரிப்பிரசாத், 500 மதிப்பெண்களுக்கு, 490 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் சிறப்பிடத்தை பிடித்தார். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களிலும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு, பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடந்த, 12 ஆண்டுகளாக பிளஸ் 2 போன்ற பொதுத்தேர்வில், இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. பல்வேறு படங்களில் மாணவர்கள், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று வருகின்றனர். நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு காமராஜ் டிரஸ்ட் மூலம் சலுகை கட்டணம், 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்
படுகிறது என, பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன் கூறினார்.