/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில்: உறுப்பினர்கள் வலியுறுத்தல்
/
பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில்: உறுப்பினர்கள் வலியுறுத்தல்
பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில்: உறுப்பினர்கள் வலியுறுத்தல்
பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில்: உறுப்பினர்கள் வலியுறுத்தல்
ADDED : ஆக 09, 2024 02:54 AM
கரூர்: கரூரில் இருந்து, சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என, ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் சேவியர் தலைமை வகித்தார். ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வெங்கமேடு, அரசு காலனி, பஞ்சமாதேவி போன்ற பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில், ரயில்வே ஸ்டேஷன் வடக்கு பகுதியில் நுழைவாயில் அமைக்க வேண்டும்.
சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பகல் நேரத்தில் சென்னை மற்றும் பெங்களூருக்கு கரூர் வழியாக ரயில் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்
பட்டது.
கூட்டத்தில், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் சக்-திவேல், முருகன், கிருஷ்ணமூர்த்தி, சண்முகசுந்தரம் உள்பட பலர்
பங்கேற்றனர்.