/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை
/
காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை
காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை
காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை
ADDED : மே 11, 2024 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, : சின்னதாராபுரத்தில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் காசிபாளையம் பகுதி உள்ளது.
பல்வேறு கிராம மக்கள் பணிகள் நிமித்தமாக, தினந்தோறும் கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். காசிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில், நிழற்கூடம் வசதி இல்லை. மழை மற்றும் கொளுத்தும் வெயில் காலங்களில் பொதுமக்கள், பல மணி நேரமாக நின்று அவதிப்படுகின்றனர். எனவே, காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.