/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிலை பாதுகாப்புக்கு இரண்டு பொறுப்பாளர்கள் நியமனம்
/
சிலை பாதுகாப்புக்கு இரண்டு பொறுப்பாளர்கள் நியமனம்
ADDED : செப் 01, 2024 04:17 AM
கரூர்: ''ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும், 24 மணி நேரமும் பாதுகாப்-பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில், இரண்டு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்,'' என, கரூர் கலெக்டர் தங்கவேல் பேசினார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:
செப்., 7ல், கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா-வின்போது, சட்டம் ஒழுங்கை பராமரித்திட விநாயகர் சிலை அமைப்பாளர்கள், சிலைகள் நிறுவுவதற்கு உரிய அனுமதி பெற்று நிறுவிட வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், சிலைகள் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகள் நீர்நிலைகளை மாசுபடுத்தாத, இயற்கை வண்ணங்களை மட்-டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணப்பூச்சு, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்-படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம், பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம், 10 அடிக்கு மேலாக இருக்கக் கூடாது.
விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில், எளிதில் தீப்பற்றக்-கூடியப் பொருட்களை கொண்டு மேற்கூரை மற்றும் பக்க-வாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. இதர மத வழிபாட்டுத்த-லங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது. ஒவ்வொரு சிலைக்கும், 24 மணி நேரமும் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில், இரண்டு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள் விசர்ஜனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, மாநக-ராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.