/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முற்றுகை
/
100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முற்றுகை
100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முற்றுகை
100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி யூனியன் அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 12, 2024 01:15 AM
குளித்தலை,
குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம், கடவூர் யூனியன் அலுவலகத்தை நேற்று காலை, 11:00 மணியளவில், 100 நாள் வேலை அட்டை வைத்திருப்
பவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், தினக்
கூலியாக, 319 ரூபாய் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். யூனியன் கவுன்சிலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
அனைவரும் மத்திய அரசை கண்டித்து, கோஷம் எழுப்பினர். திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் மத்திய அரசை கண்டித்து கண்டன உரை ஆற்றினார். பின்னர், கோரிக்கை மனுவை யூனியன் கமிஷனரிடம் அளிக்கப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.