/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் திறக்கப்படாமல் உள்ள கழிப்பறை
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் திறக்கப்படாமல் உள்ள கழிப்பறை
கலெக்டர் அலுவலக வளாகத்தில் திறக்கப்படாமல் உள்ள கழிப்பறை
கலெக்டர் அலுவலக வளாகத்தில் திறக்கப்படாமல் உள்ள கழிப்பறை
ADDED : மே 21, 2024 11:09 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் தான்தோன்றிமலையில், கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் உட்பட பல்வேறு பணிகள் நிமித்தம் காரணமாக ஏராளமானோர் வருகின்றனர். இங்கு வரும் மக்களின் வசதிக்காக, கலெக்டர் அலுவலகம் பின் புறத்தில் பொதுகழிப்பறை இருந்தது. போதிய பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்தது.
தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, அருகில் புதிய கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் போன்ற நிகழ்ச்சி நடக்கவில்லை. கலெக்டர் அலுவலகம் மக்கள் வருவது குறைவாக உள்ளது. அடுத்த மாதம் முதல் மீண்டும் மக்கள் கூட்டம் வர தொடங்கி விடும். அதற்குள் புதிய கழிப்பறை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

