/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் திருவீதி உலா
/
ரெங்கநாதர் கோவிலில் உற்சவர் திருவீதி உலா
ADDED : ஏப் 17, 2024 12:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், சித்திரை திருவிழாவையொட்டி, உற்சவர் திருவீதி உலா நடந்தது.
பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் காலை, கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து, அன்ன பறவை வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா நடந்தது.
அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 23 காலை, 7:45 மணிக்கு தேரோட்டம், 24ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 25ல் ஆளும் பல்லாக்கு, 26ல் ஊஞ்சல் உற்சவம், 27ல் புஷ்ப யாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

