/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்:கலெக்டர் தகவல்
/
கால்நடைகளுக்கு தடுப்பூசி அவசியம்:கலெக்டர் தகவல்
ADDED : ஆக 07, 2024 02:05 AM
கரூர் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு, தோல் கழலை நோய் என்ற ஒரு வகை வைரஸ் கிருமியால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் ஈ, கொசு, உண்ணி, கறவையாளர்கள் மூலமாகவும், நோய் பாதிப்பு உள்ள இடங்களில் இருந்து நோயற்ற பகுதிகளுக்கு கால்நடைகள் வந்து செல்வதாலும் பரவுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்துவதால் கன்றுகளுக்கும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கண்ணில் நீர் வடிதல், மூக்கில் சளி வடிதல், கடுமையான காய்ச்சல், உடல் முழுவதும் கண்டு கண்டாக வீங்குதல், உருண்டையான கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறுதல், நிணநீர் சுரப்பிகள் பெரிதாக காணப்படுதல், கால்கள் வீங்கி இருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளில், தற்காலிகமாக பால் உற்பத்தி குறைவு மற்றும் சினை பிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும். நோயில் இருந்து விடுபட, தடுப்பூசி செலுத்துவது அவசியமாகும். கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், முகாம்களில் தடுப்பூசி போட்டு கால்நடைகளை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.