/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாய்ந்த நிலையில் கம்பம் அச்சத்தில் கிராம மக்கள்
/
சாய்ந்த நிலையில் கம்பம் அச்சத்தில் கிராம மக்கள்
ADDED : ஜூன் 17, 2024 01:32 AM
கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம் கிராமத்தில், சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள சாலை அருகில், மின்கம்பம் உள்ளது. இதன் அடிப்பகுதி சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் அடிப்பகுதி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், காற்றின் காரணமாக மின்கம்பம் மேற்கு பகுதியில் சாய்ந்த நிலையில், ஸ்டே கம்பி மூலம் தாங்கி நிற்கிறது.
இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மின்வாரியம் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடியிருப்பு மக்கள் அச்சத்தில் உள்ளனார்.
எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றுவதற்கான நடவடிக்கையை, மாயனுார் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.