/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்
/
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்
ADDED : ஜூன் 16, 2024 01:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தான்தோன்றிமலை; கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதியில் போதிய சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்யப்படவில்லை.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் சாலையில் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் போது, கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து சாலையில் ஓடுகிறது. எனவே, போதிய சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் வசதியை, ஏற்படுத்தி தரும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.