/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டளை மேட்டு வாய்க்காலில் சாகுபடி பயிர்களுக்கு கிடைத்த நீர்
/
கட்டளை மேட்டு வாய்க்காலில் சாகுபடி பயிர்களுக்கு கிடைத்த நீர்
கட்டளை மேட்டு வாய்க்காலில் சாகுபடி பயிர்களுக்கு கிடைத்த நீர்
கட்டளை மேட்டு வாய்க்காலில் சாகுபடி பயிர்களுக்கு கிடைத்த நீர்
ADDED : மே 14, 2024 07:56 AM
கிருஷ்ணராயபுரம் : கட்டளை மேட்டு வாய்க்காலில், தண்ணீர் திறப்பு காரணமாக சாகுபடி பயிர்களான வாழைக்கு பாசன நீர் கிடைத்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது. வாய்க்கால் தண்ணீர் மூலம் விவசாயிகள் வாழை, வெற்றிலை, சோளம், ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக வாய்க்காலில் தண்ணீர் குறைந்தது.
இதனால் வாழை, வெற்றிலை, சோளம் பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பிள்ளபாளையம் வல்லம், வீரவள்ளி, மகாதானபுரம், மகிளிப்பட்டி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு கிடைத்து வருகிறது.