/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா?
/
புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா?
புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா?
புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா?
ADDED : மே 06, 2024 02:21 AM
கரூர்: கரூர் அருகே, புலியூரில் அம்பேத்கர் நகருக்கு செல்லும் வழியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் அருகே, புலியூர் டவுன் பஞ்சாயத்தில், அம்பேத்கர் நகர் உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்ல, அரை கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஏற்கனவே குண்டும், குழியுமான மண் சாலைகளில் நடக்க முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையின் போது, அம்பேத்கர் நகரில் இருந்து, சேரும், சகதியில் நடந்து திருச்சி சாலைக்கு செல்ல முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் தடுமாறினர்.
இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
திருச்சி சாலையில் இருந்து, புலியூர் அம்பேத்கர் நகர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. நடந்து செல்ல முடியவில்லை. இதுகுறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மனு கொடுத்தும் பயன் இல்லை. விரைவில் அம்பேத்கர் நகருக்கு, செல்லும் மண் பாதையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.