ADDED : ஆக 22, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
?
கிருஷ்ணராயபுரம், ஆக. 22-
மஞ்சமேடு வாய்க்காலில், அதிகமாக வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மஞ்சமேடு வழியாக பாசன வாய்க்கால் செல்கிறது. இதில் வரும் தண்ணீரை வைத்து விவசாயிகள் விளை பொருட்களை சாகுபடி செய்து வருகின்றனர். வெற்றிலை, வாழை, நெல் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது பாசன வாய்க்காலில், அதிகமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வருவதால், பாசனத்திற்கு குறைவான தண்ணீரே செல்கிறது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. மேலும் வாய்க்காலில் அதிகமாக கழிவு நீர் கலந்து செல்கிறது.
எனவே, வாய்க்காலில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.