/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிரிவு சாலையில் விபத்து ரவுண்டானா அமைக்கப்படுமா?
/
பிரிவு சாலையில் விபத்து ரவுண்டானா அமைக்கப்படுமா?
ADDED : ஆக 05, 2024 02:26 AM
கரூர், தென்னிலை பிரிவு சாலையில் விபத்துக்களை தடுக்க, ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் - கோவை நெடுஞ்சாலையில், தென்னிலை கடைவீதியில் நால்ரோடு அமைந்துள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேஷன், போஸ்ட் ஆபீஸ், வி.ஏ.ஓ., அலுவலகங்கள், ஆர்.ஐ., அலுவலகம், மளிகை கடைகள், டீ மற்றும் ஹோட்டல்கள் போன்ற வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களிலிருந்து கூலித்தொழிலாளர்கள், உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் பல்வேறு பணி நிமித்தமாக தென்னிலை கடைவீதியில் நால்ரோடு சந்திப்பில் கூடுகின்றனர்.
அதற்கு தென்னிலை பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளும், கரூர் தாராபுரம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு வரும் வாகன ஓட்டிகளும் சென்று விட்டு திரும்பும் வாகனங்கள் ஏராளமான ஜல்லி லாரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று திரும்புகின்றன. எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் அடிக்கடி உண்டாவதால் விபத்துக்களும் நடக்கின்றன. தென்னிலை கடைவீதி நால்ரோடு பிரிவு சந்திப்பதால் ரவுண்டானா, தானியங்கி சிக்னல் அமைத்திட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.