/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டெக்ஸ்டைல்ஸ் அதிபரை அடித்த பெண் கைது
/
டெக்ஸ்டைல்ஸ் அதிபரை அடித்த பெண் கைது
ADDED : ஆக 11, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூரில், டெக்ஸ்டைல்ஸ் அதிபரை அடித்த, பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கரூர் ஏ.அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 43, டெக்ஸ்டைஸ் அதிபர். இவருக்கும், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயந்தி, 40, என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த, 7 மதியம் மாநகராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த ஜெயந்தியிடம், தர வேண்டிய பணத்தை கணேசன் கேட்டுள்ளார். அப்போது, ஆத்திரம் அடைந்த ஜெயந்தி, கணேசனை கையால் அடித்துள்ளார். இதுகுறித்து, கணேசன் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் ஜெயந்தியை கைது செய்தனர்.