ADDED : மே 04, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி : சின்னதாராபுரம் சுற்றுவட்டார பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சின்ன தாராபுரம் அருகே பனையம்பாளையம் பகுதியில் ராமசாமி மனைவி மகேஸ்வரி சக்தி, 43, என்பவர் அவரது வீட்டின் அருகே மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 2,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.