ADDED : ஆக 02, 2024 01:31 AM
குளித்தலை, குளித்தலை எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், நேற்று குளித்தலை யூனியன் பஞ்., பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு, கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம், 26 பயனாளிகளுக்கு வீடு கட்டும் வேலைக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
யூனியன் கமிஷினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பஞ்., துணைத்
தலைவர் தேன்மொழிதியாகராஜன், யூனியன் கவுன்சிலர் சந்திரமோகன், மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் ராஜேந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தியாகராஜன், நல்லுார் பஞ்., தலைவர் கலாகுணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம், 26 பயனாளிகளுக்கு தலா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடு கட்டும் வேலைக்கான பணி ஆணையை, எம்.எல்.ஏ., மாணிக்கம் வழங்கி. தி.மு.க.,ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசினார்.
யூனியன் மேலாளர் சுரேஷ். துணை மேலாளர் பிச்சமணி, யூனியன் அலுவலர்கள், பஞ்., செயலர்கள். பொது மக்கள், தி.மு.க.,பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.