/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாயிக்கு கத்திக்குத்து தொழிலாளி தலைமறைவு
/
விவசாயிக்கு கத்திக்குத்து தொழிலாளி தலைமறைவு
ADDED : மார் 27, 2024 04:01 PM
குளித்தலை: குளித்தலை அடுத்த மாலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 47; விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி சிவக்குமார் என்பவருக்கும், கடந்த பொங்கல் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது. இதில் முன்விரோதம் இருந்துள்ளது. இந் நிலையில் கடந்த, 25 மாலை, 5:00 மணியளவில் மாலைப்பட்டி தண்ணீர் டேங்க் அருகே சுப்பிரமணி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த சிவக்குமார், 'எங்களுக்கு தண்ணீர் வரவில்லை, நீ எப்படி தண்ணீர் பிடிக்கலாம்' என, ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த சிவக்குமார், அருகில் கிடந்த கத்தியை எடுத்து சுப்பிரமணி வயிற்றில் குத்தி உள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சுப்பிரமணியை மீட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

