ADDED : மே 30, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, கடைக்காரரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
குளித்தலை அடுத்த, வயலுார் பஞ்., தேவசிங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 35. பெட்டிக்கடை வைத்துள்ளார். போத்தராவுத்தன்பட்டி பஞ்., வடுகப்பட்டியை சேர்ந்த சக்திவேல், 29, என்ற கூலி தொழிலாளி கடந்த, 23 மாலையில் பெட்டி கடைக்கு வந்து கடலை மிட்டாய் எடுத்து சாப்பிட்டார். அதற்குரிய பணத்தை நாகராஜ் கேட்டார்.
பணம் தர மறுத்து, அருகில் கிடந்த குச்சியால் நாகராஜை தாக்கினார். தடுக்க வந்த நாகராஜ் தந்தை கருப்பன், 60, மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தந்தை, மகன் இருவரும், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இது குறித்து நாகராஜ் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.