/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தண்டு மாரியம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றி வழிபாடு
/
தண்டு மாரியம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றி வழிபாடு
தண்டு மாரியம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றி வழிபாடு
தண்டு மாரியம்மன் கோவிலில் புனித நீர் ஊற்றி வழிபாடு
ADDED : ஏப் 28, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி,: கோபி, சீதாலட்சுமிபுரம், தண்டுமாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த, 23ம் தேதி துவங்கியது. 24ல் பூச்சாட்டுதலுக்குப் பின் கோவில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது. அதுமுதல் கம்பத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வருகின்றனர். நாளை சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது.
மே, 1ல் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல், மே, 2ல் சந்தியாவனத்துறையில் இருந்து பால் குடம் எடுத்து வருதல், அலகு குத்துதல், மாவிளக்கு பூஜை, பொங்கல் வைபவம் நடக்கிறது. மே, 3ல் மஞ்சள் நீர் உற்சவம், 4ல் மறுபூஜை நடக்கிறது.