/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மொபட் திருடிய வாலிபர் மக்கள் பிடித்து 'கவனிப்பு'
/
மொபட் திருடிய வாலிபர் மக்கள் பிடித்து 'கவனிப்பு'
ADDED : செப் 08, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபட் திருடிய வாலிபர்
மக்கள் பிடித்து 'கவனிப்பு'
கரூர், செப். 8-
கரூர், வடக்குப் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 40; இவரது வீட்டுக்கு முன், நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டிருந்த டி.வி.எஸ்., மொபட்டை, இரண்டு வாலிபர்கள் திருடிக்கொண்டு சென்றனர். இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இரண்டு வாலிபர்களையும் விரட்டினர். அதில், கரூர் தெரசா கார்னரை சேர்ந்த யுகேந்திரன், 28, என்ற வாலிபர் மட்டும் சிக்கினார். அவரை பொதுமக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து பசுபதிபாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய திருச்சியை சேர்ந்த பாலமுருகன் என்பரை, பசுபதிபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.