/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துர்க்கா தேவி, கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யுகாதி திருவிழா
/
துர்க்கா தேவி, கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யுகாதி திருவிழா
துர்க்கா தேவி, கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யுகாதி திருவிழா
துர்க்கா தேவி, கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யுகாதி திருவிழா
ADDED : ஏப் 10, 2024 02:19 AM
கரூர்;தெலுங்கு வருட பிறப்பு என அழைக்கப்படும் யுகாதி திருவிழாவையொட்டி, நன்செய் புகழூர் அக்ரஹாரம் அஷ்டதாசா பூஜா மஹாலட்சுமி துர்கா தேவிக்கு, சிறப்பு அலங்காரம் நேற்று நடந்தது.முன்னதாக மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், யுகாதி திருவிழாவையொட்டி, நேற்று காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், மஹா தீபாராதனை நடந்தது. நேற்றிரவு ஐந்து ரூபாய் நாணயங்கள் கொண்ட தேரில் உற்சவர் அம்மன் ஊர்வலம், கோவில் வளாகத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.