தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவுமாணவ, மாணவியர் கொண்டாட்டம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவுமாணவ, மாணவியர் கொண்டாட்டம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவுமாணவ, மாணவியர் கொண்டாட்டம்


ADDED : ஏப் 16, 2025 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2025 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவுமாணவ, மாணவியர் கொண்டாட்டம்

கரூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று நிறைவு பெற்றது. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்களுடன், துள்ளிக்குதித்து மாணவ, மாணவியர் தேர்வறையை விட்டு வெளியே வந்தனர்.

தமிழகத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 28ல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. கரூர் மாவட்டத்தில், 59 தேர்வு மையங்களில், -5,706 மாணவர்கள், - 5,781 மாணவியர், தனித்தேர்வர், 1,103 என மொத்தம், 12,590 பேர் தேர்வெழுதினர். மொழி பாடங்கள் எளிதாக இருந்த நிலையில், கணிதம் கடினமாக இருந்ததால் மாணவ, மாணவியர் கவலையில் உள்ளனர். கடந்த முறையை விட, இந்தாண்டு அறிவியல் தேர்வு வினாத்தாள் எளிமையாக அமைந்து விட்டதால், மகிழ்ச்சி அடைந்தனர்.

தேர்வு நேற்று முடிவடைந்ததால் மாணவ, மாணவியர் தேர்வறையை விட்டு வெளியே வந்ததும், ஒருவர் மீது ஒருவர் பேனா 'இங்க்' தெளித்தும், பைகளில் எடுத்து வந்த, வண்ணப்பொடிகளை துாவியும், நண்பர்களின்

சீருடைகளில் ஒருவருக்கொருவர் பெயர் எழுதியும் பிரியா விடை பெற்றனர். உயர்

நிலைப்பள்ளியில் படித்தவர்களோ இனி, வேறு பள்ளிக்கு போகிறோமே என கண்களில் கண்ணீர் ததும்ப, நண்பர்களை கட்டியணைத்து பிரியா விடை அளித்தனர். கடைசியாக நேற்று நடந்த சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததால், மாணவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us