ADDED : ஜூலை 15, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டத்தில், பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வாங்கல், வேலாயுதம்பாளையம் மற்றும் தான்தோன்றிமலை பகுதிகளில், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக ராஜா, 43; சுப்பன், 62; செல்வம், 52; செல்வகுமார், 32; ரவி, 51; நல்லசிவம், 33; ராமச்சந்திரன், 24; பூவரசன், 30; நவீன் குமார், 29; சதீஷ், 30; ஆகிய, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.