/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் அதிரடி கைது
/
சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் அதிரடி கைது
ADDED : ஜூன் 17, 2025 01:49 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, நல்லாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட, 10 பேரை போலீசார் கைது செய்து, 15 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
அரவக்குறிச்சி அருகே, சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரவக்குறிச்சி அருகே உள்ள நல்லாம்பட்டி பகுதியில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குடகனாறு தடுப்பணை அருகே சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சுரேஷ், 34, செல்வராஜ், 62, நாகராஜ், 57, நடராஜ், 64, சிவசுந்தரம், 50, பால்ராஜ், 63, செந்தில், 40, மணிவேல், 44, காமராஜ், 44 உள்பட 10 பேரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாட்டத்தில் பயன்படுத்திய, 15 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.