100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
ADDED : மார் 30, 2026 05:51 AM
கரூர்:கரூர்
மாவட்டத்தில் உள்ள, நான்கு தொகுதிகளிலும், 100 சதவீதம்
ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
துண்டு பிரசுரங்கள், பேரணிகள், கோலங்கள், வாக்காளர் உறுதிமொழி
உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
அந்த வகையில், பொதுமக்களுக்கு அன்றாட வாழ்வில்
வினியோகிக்கப்படும் பால் பாக்கெட்டில், 'வாக்களிப்போம் ஒன்றாக
வளர்ச்சி அடைவோம்' என்ற வாசகம் அடங்கிய பால் பாக்கெட்டை
பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
மேலும், மின்வாரியம்,
பேரூராட்சிகளில் வரி செலுத்த வருவோருக்கு, குடிநீர் ரசீது, சொத்து
வரி ரசீது, மின்கட்டண ரசீது ஆகிய ரசீதுகளில், 'மறவாமல்
வாக்களிப்போம் ஜனநாயகம் காப்போம்' 'என் வாக்கு என் எதிர்காலம்' ஆகிய
வாசகங்கள் அடங்கிய ரசீதுகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
