மரக்கன்று பராமரிப்பு பணியில் 100 நாள் தொழிலாளர்கள்
மரக்கன்று பராமரிப்பு பணியில் 100 நாள் தொழிலாளர்கள்
ADDED : பிப் 05, 2026 07:32 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்: வயலுார் பஞ்சாயத்து சாலையோர இடங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளை, பராமரிக்கும் பணிகளில் நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, தேவசிங்கப்பட்டி, நடுப்பட்டி, வயலுார் ஆகிய கிராமங்களின் சாலையோர பகுதிகளில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், 500க்கும் மேற்பட்ட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, மரக்கன்றுகளுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. பின்னர் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.
