/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெண்ணைமலை கொங்கு பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
/
வெண்ணைமலை கொங்கு பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
வெண்ணைமலை கொங்கு பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
வெண்ணைமலை கொங்கு பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 19, 2025 01:51 AM
கரூர்: கரூர், வெண்ணைமலை கொங்கு மேல்நிலைப்பள்ளியின், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். இதில், பத்தாம் வகுப்பில், 137 பேர், பிளஸ் 1 வகுப்பில், 195 பேர் கல்வி பயின்றனர். அவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவன் நிஷ்வந்த், 484 மதிப்பெண் பெற்றார். மாண-வியர் பிரியங்கா, 478 மதிப்பெண் பெற்று, 2ம் இடம்; நிவேதி-காஸ்ரீ, 477 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தனர்.
பிளஸ் 1ல், மாணவி தனுஸ்ரீ, 539 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் மூபீன், 524 மதிப்பெண் பெற்று, 2ம் இடம்; அகமது பர்கான், 523 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தனர். 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினார். அறக்கட்டளை செய-லாளர் விசா சண்முகம், தாளாளர் பாலுகுருசுவாமி, பள்ளி முதல்வர் சுரேஷ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

