ADDED : ஏப் 04, 2024 04:45 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: தோகைமலையில் 100 சதவீத ஓட்டுப்பதிவு மற்றும் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில், போலீசார் அணிவகுப்பு பேரணி
நடந்தது.
குளித்தலை அடுத்த, தோகைமலை தனியார் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, நேற்று காலை போலீசார் அணிவகுப்பு விழிப்புணர்வு பேரணியை டி.எஸ்.பி., செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெறவும், வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போலீசார்
விழிப்புணர்வு பேரணி குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் தோகைமலை பஸ் ஸ்டாண்டு, கடைவீதி, முக்கிய குடியிருப்புகள், தோகைமலை சோதனை சாவடி வழியாக வந்து, தோகைமலை போலீஸ் ஸ்டேஷனில் பேரணி முடிவுற்றது. இன்ஸ்பெக்டர்கள், மத்திய பாதுகாப்பு படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து
கொண்டனர்.
