தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரூ.1000 லஞ்சம் போர்மேன் கைது

ரூ.1000 லஞ்சம் போர்மேன் கைது

ரூ.1000 லஞ்சம் போர்மேன் கைது


ADDED : பிப் 07, 2024 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாவட்டம், ஆட்சிமங்கலம் கோல்டன் சிட்டியை சேர்ந்தவர் மணி, 48. இவர் 2019ல், பிரதமர் வீடு திட்டத்தில் வீடு கட்ட வர்த்தக பயன்பாடு மின் இணைப்பு வாங்கினார்.

தற்போது வீடு கட்டிய நிலையில் வர்த்தக பயன்பாடு மின் இணைப்பை வீட்டு உபயோக மின் இணைப்பாக மாற்ற ராயனுார் மின் வாரிய துணை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அதை பரிசீலித்த மின் வாரிய போர்மேன் முருகானந்தம், 49, லஞ்சமாக 1000 ரூபாய் கேட்டுள்ளார். மணி புகார்படி கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அறிவுரைபடி, மணி நேற்று ராயனுார் மின்வாரிய துணை பொறியாளர் அலுவலகத்தில் இருந்த, முருகானந்திடம் 1000 ரூபாயை லஞ்சமாக வழங்கிய போது மறைந்திருந்த போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us