/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 108 கலச பூஜை
/
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 108 கலச பூஜை
ADDED : மே 29, 2024 07:23 AM
கரூர் : அக்னி நட்சத்திர காலம் நிறைவு பெற்றதால், நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கலச பூஜை நடந்தது.கடந்த, 4 முதல், நேற்று முன்தினம் வரை கோடைக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, அக்னி நட்சத்திர காலமாக கருதப்பட்டது.
அப்போது, தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக, 110 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் அக்னி நட்சத்திர காலம் நிறைவு பெற்றது.இதையடுத்து, நேற்று மாலை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், 108 கலச பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.