/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
10ம் வகுப்பு தேர்வு நிறைவு மாணவர்கள் கொண்டாட்டம்
/
10ம் வகுப்பு தேர்வு நிறைவு மாணவர்கள் கொண்டாட்டம்
ADDED : ஏப் 09, 2024 07:37 AM
நாமக்கல் : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, நேற்று முடிவடைந்ததையடுத்து, தேர்வெழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் துள்ளிக்குதித்து மிகழ்ந்தனர்.
தமிழகம் முழுதும், கடந்த, 26ல் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கி நேற்று முடிவடைந்தது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தேர்வை, 298 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10,702 மாணவர், 9,670 மாணவியர் என, 20,372 பேர் எழுதினர். இதற்காக மாவட்டம் முழுதும், 92 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு, நேற்று நிறைவடைந்தது. தேர்வெழுதிவிட்டு மையத்தில் இருந்து வெளியே வந்த மாணவ, மாணவியர் துள்ளிக்குதித்து ஓடிவந்தனர். பின், நண்பர்கள், தோழிகளிடம் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கியும், இனிப்பு வழங்கியும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு பிரியா விடையுடன் கோடை விடுமுறையை தொடங்கினர். சில மாணவ, மாணவியர் மொபைல் போனில், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.

