/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவருக்கு 'காப்பு'
/
1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவருக்கு 'காப்பு'
1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவருக்கு 'காப்பு'
1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவருக்கு 'காப்பு'
ADDED : ஏப் 19, 2025 01:26 AM
கரூர், ஏகரூர் அருகே காரில் கடத்தப்பட்ட, 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் மாவட்ட, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்நாதன், எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் கரூர் அருகே மின்னாம்பள்ளி பிரிவு பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரில், 22 மூட்டைகளில் இருந்த, 1,100 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதாக, கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியை சேர்ந்த முருகேசன், 40, என்பவரை குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து கார் மற்றும் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.