/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோகைமலையில் 11வது தேசிய கைத்தறி தின விழா
/
தோகைமலையில் 11வது தேசிய கைத்தறி தின விழா
ADDED : ஆக 09, 2025 01:45 AM
குளித்தலை, தோகைமலையில், அஞ்சல் ஊழியர்கள் சார்பாக, 11வது தேசிய கைத்தறி தினவிழா கொண்டாடப்பட்டது.
தோகைமலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, அஞ்சல் துறையின் குளித்தலை உட்கோட்ட ஆய்வாளர் ஸ்டாலின் தலைமை வகித்தார். நெசவாளர்கள் பாலசுந்தரம், குணசேகரன், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தோகைமலை துணைஅஞ்சல் அலுவலர் மணிமன்னன் வரவேற்றார். அஞ்சல் துறை கரூர் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி, தேசிய கைத்தறி தின விழாவின் சிறப்புகள் குறித்து பேசினார்.
பின்னர் நெசவாளர்களுக்கு, பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். அதனை தொடர்ந்து ஆதார் சேவை, பொதுமக்களுக்கான சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் நெசவு தொழிலை காப்போம் என்று உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தோகைமலை துணை அஞ்சலக ஊழியர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

