/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏப்.,12ல் தொழில் முனைவோருக்கு சாட் ஜிபிடி பயிற்சி வகுப்பு
/
ஏப்.,12ல் தொழில் முனைவோருக்கு சாட் ஜிபிடி பயிற்சி வகுப்பு
ஏப்.,12ல் தொழில் முனைவோருக்கு சாட் ஜிபிடி பயிற்சி வகுப்பு
ஏப்.,12ல் தொழில் முனைவோருக்கு சாட் ஜிபிடி பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 02, 2025 01:40 AM
ஏப்.,12ல் தொழில் முனைவோருக்கு சாட் ஜிபிடி பயிற்சி வகுப்பு
கரூர்,:வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான ஒருநாள் சாட் ஜிபிடி பயிற்சி வகுப்பு வரும், 12ல் நடக்கிறது.
கரூர், தான்தோன்றிமலையில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு சாட் ஜிபிடி பயிற்சி வகுப்பு வரும், 12ல் நடக்கிறது. பயிற்சியில் வணிக செயல்பாடுகளுக்கு ஏற்ப, பொருத்தமான தரவுகளை வழங்குதல், சாட் ஜிபிடி உதவியுடன் இலக்குகளை சரியான வகையில் அமைத்தல், கன்டன்டுகளை உருவாக்குதல், வாடிக்கையாளர்கள் உடனான உரையாடலை மேம்படுத்த ஏஐ கருவிகளை பயன்படுத்துதல்.
மேலும், வணிக யுக்திகளை துல்லியமாக கண்காணித்தல் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சவால்களுக்கு சாட் ஜிபிடி மூலம் தீர்வு காணுதல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, 100க்கும் மேற்பட்ட சாட் ஜிபிடி பற்றி தரவுகளுடன் கூடிய புத்தகம், வழிகாட்டுதல், வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்திலும், 99943 22859 என்ற மொபைல் எண்ணிலும் முன்பதிவு செய்வது அவசியம்.
இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.