/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடந்த ஆண்டு ரூ.1.35 கோடி புத்தகங்கள் விற்பனை; விழாவில் கலெக்டர் தகவல்
/
கடந்த ஆண்டு ரூ.1.35 கோடி புத்தகங்கள் விற்பனை; விழாவில் கலெக்டர் தகவல்
கடந்த ஆண்டு ரூ.1.35 கோடி புத்தகங்கள் விற்பனை; விழாவில் கலெக்டர் தகவல்
கடந்த ஆண்டு ரூ.1.35 கோடி புத்தகங்கள் விற்பனை; விழாவில் கலெக்டர் தகவல்
ADDED : அக் 04, 2024 01:15 AM
கடந்த ஆண்டு ரூ.1.35 கோடி புத்தகங்கள் விற்பனை; விழாவில் கலெக்டர் தகவல்
கரூர், அக். 4-
''கடந்த ஆண்டு நடந்த புத்தகத் திருவிழாவில், 1.35 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் பிரேம் மஹாலில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நுாலக இயக்கம் இணைந்து மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழாவை நடத்தியது. கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்து பேசியதாவது: மாணவர்களுக்கு பயன்படும் மின்நுால் மற்றும் மின்பொருண்மை பதிப்பாளர்களின் படைப்புகளை கொண்ட விற்பனையகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், அரசுத் துறைகளின் திட்டங்கள் குறித்த அரங்கங்கள், வாசிப்பு அரங்கங்கள் மற்றும் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலிஅமைப்புடன் கூடிய அரங்கங்கள் இடம் பெறவுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும், தமிழகத்தின் தலைச்
சிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுால் விற்பனையகங்கள் அனைத்தும், புத்தக கண்காட்சிக்கு வருபவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அதன் கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த புத்தகத் திருவிழாவில், 1.35 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது. இந்த ஆண்டு அதை விட விற்பனை அதிகரிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
மாநகராட்சி மேயர் கவிதா, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, டி.ஆர்.ஓ.,க்கள் கண்ணன், விமல்ராஜ் (நிலமெடுப்பு) உள்பட பலர் பங்கேற்றனர்.