/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில், 14,987 மெ.டன் நெல் கொள்முதல்: கலெக்டர்
/
மாவட்டத்தில், 14,987 மெ.டன் நெல் கொள்முதல்: கலெக்டர்
மாவட்டத்தில், 14,987 மெ.டன் நெல் கொள்முதல்: கலெக்டர்
மாவட்டத்தில், 14,987 மெ.டன் நெல் கொள்முதல்: கலெக்டர்
ADDED : ஜூன் 21, 2025 01:05 AM
கரூர், ''கரூர் மாவட்டத்தில், 14,987 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட் டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட, பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 4,889 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நெல் பயிர் சாகுபடிக்காக, 180 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறுதானிய விதைகள், 13 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. எண்ணை வித்துக்கள், ஐந்து மெட்ரிக் டன்னும், பயறு வகைகள், 36 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு ஜூன் மாதம் வரை, 161.32 மி.மீ., மழை பெய்துள்ளது.
கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 14 ஆயிரத்து, 987 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 3,025 விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு, 36.60 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையம் தொடர்பாக விவசாயிகள், 18005993540 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, 10 முதல், 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பதில் அளிக்க அதிகாரிகள் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, வேளாண்மை துறை இணை இயக்குநர் சிவானந்தம், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தியாகராஜன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, வேளாண் விற்பனை மற்றும் வணிக துணை இயக்குனர் நிர்மலா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, விவசாயிகள் தரப்பில், 81 கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.

