ADDED : பிப் 17, 2024 01:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே பள்ள மருதப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 50; விவசாயி. இவர், வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல், நேற்று முன்தினம் இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, சக்திவேல் துாங்க சென்றுவிட்டார்.
பிறகு, நேற்று காலை சக்திவேல் பட்டிக்கு சென்றபோது, 15 ஆடுகள் வெறி நாய் கடித்து இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த, கால்நடை உதவி மருத்துவர் அபிராமி, உயிரிழந்த ஆடுகளை ஆய்வு செய்தார். காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.